பகவத்கீதை பிறந்த நாள்

(பகவத்கீதை உபதேசிக்கப்பட்ட திருநாள்)

வேதஞானத்தின் மணிமகுடமாகத் திகழ்வது  பகவத்கீதை. சுமார் 5500 வருடங்களுக்கு முன் மோட்ச ஏகாதசி அன்று குருஷேத்திர போர்க்களத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜூனனுக்கு பகவத்கீதையை உபதேசித்தார். தற்போது ஒவ்வொரு வருடமும் இந்த நாள் கீதை பிறந்த நாளாக, கீதை உபதேசிக்கப்பட்ட திருநாளாக  உலகம் முழுவதும் கொண்டாடப் படுகிறது.   

கீதை பிறந்த காரணம்

அர்ஜூனனுக்கு ஏற்பட்ட மனக்குழப்பத்தை நீக்கவே பகவத்கீதை உபதேசிக்கப்பட்டது.  மேலும் அர்ஜூனன் மட்டுமல்லாது அனைவரும் இதன் மூலம் பயனடைய வேண்டும் என்றே பகவானால் இந்த அறிவுரை உலகுக்கு அர்ஜூனன் மூலமாக உணர்த்தப்பட்டது.

அனைவரும் படிக்க வேண்டிய பகவத்கீதை

கீதையை படிக்க ஜாதி,மத,இன, பேதம் என்று எதுவுமில்லை. யார் வேண்டுமானாலும் பகவத்கீதையை படிக்கலாம். குறிப்பாக நமது வாழ்வின் உண்மை அர்த்தம் என்ன? அல்லது நாம் ஏன் இவ்வளவு துன்புகிறோம்? என்று ஒருவர் மனதில் நினைக்கும் போது அவர் பகவத்கீதையை படிக்கத் தகுதியானவராகி விடுகிறார்.

கீதையின் கருத்துக்கள் முழுவதும் சென்றடையாத காரணம்

பகவத்கீதையின் கருத்துக்கள் ஒவ்வொருவரின் நடைமுறை வாழ்வுக்கும் மிகவும் அவசியமானதாகும். கீதையைப் போன்றதொரு வாழ்க்கைப் பாடம் எதுவுமில்லை. கீதையின் கருத்துக்களை உள்ளது உள்ளபடி தெரிந்து கொண்டால் நிச்சயம் அவர் வாழ்வின் உயர்ந்த பக்குவத்தை அடைவார். பெரிய பெரிய அறிஞர்கள், விஞ்ஞானிகள் உட்பட ஏன் நம் காந்தியும் கூட கீதையின் மூலமே உயர்ந்த கருத்துக்களை திரட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதன் கருத்துக்கள் மக்களிடையே சரியாக சென்று சேராததன் காரணம், பகவத்கீதைக்கான  சரியான உரை நூலை தேர்வு செய்யாததே ஆகும்.

உள்ளது உள்ளபடி கீதையை தெரிந்து கொள்ள

பகவத்கீதைக்கு பலவிதமான மொழிபெயர்ப்பு உரைகள் வெளியாகி உள்ளன.  இதில் எது தெளிவானது, உண்மையானது, அதிகாரப்பூர்வமானது என்பதை உறுதிசெய்ய வேண்டும்.  அதாவது கீதையானது அதிகாரப் பூர்வமான சீட பரம்பரையிலிருந்து வந்ததாக இருக்க வேண்டும். ஏனெனில் பக்குவம் இல்லாதவர்களால் எழுதப்படும் கீதைக்கான உரையானது, கீதையின் உண்மை நோக்கத்தை சிதறடித்து விடும்.

பகவத்கீதை உண்மையுருவில்

1972ல் ஆங்கில மொழியில் “Bhagavad Gita As-it-is” என்று வெளியிடப்பட்ட, உலகப் புகழ்பெற்ற ‘பகவத்கீதை உண்மையுருவில்’ எனும் நூல் மிகவும் தெளிவாகவும், அதிகாரப் பூர்வமாகவும் பகவத்கீதையை உள்ளது உள்ளபடி தருகிறது.  இதற்கு காரணம் இதன் உரை ஆசிரியர் தெய்வத்திரு.அ.ச.பக்தி வேதாந்த ஸ்வாமி பிரபுபாதா” பகவத்கீதை உபதேசிக்கப்பட்ட அதிகாரப் பூர்வமான குரு சீட பரம்பரையில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர இந்நூலில் ஸ்வாமி ஸ்ரீலபிரபுபாதா பகவான் ஸ்ரீகிருஷ்ணர் எவ்வாறு உபதேசித்தாரோ, அர்ஜூனன் எவ்வாறு புரிந்து கொண்டாரோ, அவ்வாறே உள்ளது உள்ளபடி கீதையின் பொருளை சிதைக்காமல் கொடுத்துள்ளார். தவிர 45க்கும் மேற்பட்ட வேதங்கள், உபநிஷத்துக்களிலிருந்தும் மேற்கோள் காட்டியுள்ளார். தற்சமயம் இந்த பகவத்கீதை உண்மையுருவில் நூல் 60க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

கடமைகளை ஆற்றிக் கொண்டே வாழ்வது

பகவத்கீதையை படிக்கும் யாரும் துறவியாக வேண்டும் என்று கிடையாது.  அர்ஜூனனைப் போல கடமைகளை ஆற்றிக் கொண்டே எவ்வாறு பக்குவமான, கிருஷ்ண பக்தி மயமான வாழ்வு நடத்துவது என்பது பற்றி பகவத்கீதை உண்மையுருவில் நூலில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

பெரிய சீர்திருத்தம்

கீதையின் கருத்துக்களை ஜாதி,மத,இன, பேதம் பாராமல் அனைத்து நாடுகளிலும் அனைத்து தரப்பினரிடமும் சென்றடையச் செய்து வருகிறது இந்த  பகவத்கீதை உண்மையுருவில் எனும் நூல். இதன் மூலமாக உலகெங்கும் வேதஞானம், தத்துவம், பண்பாடு இவற்றில் பெரிய சீர்திருத்தத்தை  இது உண்டாக்கி வருகிறது.  பல்லாயிரக்கணக்கான, இளைஞர்களும், யுவதிகளும் இந்த மாபெரும் இலக்கியத்தை படித்து வேதப் பண்பாட்டின் வாழ்க்கை நெறிகளால் கவரப்பட்டு அமைதியான பக்குவமான வாழ்க்கை நடத்துகின்றனர். 

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பகவத்கீதைக்கு பல மொழிபெயர்ப்பு உரைகள் உள்ளன. அமெரிக்கா உட்பட உலகெங்கும் உள்ள பல்கலைக்கழகங்களால் இந்த பகவத்கீதை உண்மையுருவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.  தவிர தமிழ், இந்தி, முதலான இந்திய மொழிகளிலும் அரேபிய சைனீஸ், டச், பிரஞ்சு, ஜெர்மனி, இத்தாலி ஜப்பானீஸ், போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ், ஸ்வீடன், இந்தோனேசிய, ருஷ்ய, உருது, கிரேக்கம் உட்பட 60க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் வெளியிடப் பட்டு கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை பக்குவப்படுத்தி வருகிறது பகவத்கீதை உண்மையுருவில்.

கீதா மஹாத்மியம்

கீதை மிகவும் மகிமை பொருந்தியது. யார் ஒருவர் தினசரி கீதையை உண்மை உருவில் படித்து அல்லது கேட்டு வருகிறாரோ அவர் நிச்சயம் வாழ்வின் பக்குவத்தை அடைவார் என்று வேத சாஸ்திரங்கள் கூறுகிறது. அதுமட்டுமல்லாமல் கீதையை  பற்றி மற்றவர்களுக்கு கூறுவதும், தருவதும் மிகவும் மகிமை பொருந்தியது. பகவத்கீதையை மணநாள், பிறந்த நாள் போன்ற விழாக்கால பரிசாகவும், வாடிக்கையாளர் பரிசாகவும் அளிக்கலாம்.

கீதையை கற்றுத் தரும் இஸ்கான்”

பகவத்கீதையை உள்ளது உள்ளபடி வழங்குவதையே தனது வாழ்வின் உயிர் நாடியாக கொண்டுள்ளது இஸ்கான்.  பகவத்கீதையை  படிப்பதற்காகவும், பகவத்கீதையின் விளக்கங்களை தெளிவான முறையில் அறிந்து கொள்வதற்காகவும் இஸ்கான் பலவிதமான நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

மாணவர்கள், குடும்பஸ்தர்கள், வணிகஸ்தர்கள், தொழிலதிபர்கள், அரசு அலுவலர்கள் என பலதுறைகளைச் சேர்ந்த தன்னார்வமிக்க தொண்டர்கள் இஸ்கான் கோயிலின் சேவகர்களாக இணைந்து, பகவத்கீதை புத்தகங்களை  எல்லா கிராம, நகரங்களில் மூலை முடுக்குகளில் எல்லாம் வழங்கி வருகின்றனர்.

பகவத்கீதை பிறந்த நாள் விழா

எனவே கீதை உபதேசிக்கப்பட்ட இந்த நன்னாளில் இஸ்கான் உலகெங்கும் பல சிறப்பு நிகழ்ச்சிகளையும், குறைந்த நன்கொடையில் கீதை மற்றும் கீதை சம்பந்தமான புத்தகங்களை வழங்குகிறது.   இஸ்கான்  கோயிலில்  பகவத்கீதை பிறந்த நாள் விழா அன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் பகவத்கீதை முக்கியத்துவம் குறித்த சிறப்பரைகளும், பகவத்கீதைக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

பகவத்கீதை பற்றிய விஞ்ஞானிகள் மற்றும் அறிஞர்களின் கருத்து . . .

சந்தேகங்கள் என்னை சூழும் போதும், ஏமாற்றங்கள் என் முகத்தை உற்று நோக்கும் போதும்,  உடனே கீதையைப் புரட்டி என்னை சாந்தப்படுத்தும் ஒரு பதத்தை காண்பதுண்டு. உடனே  துன்பங்களுக்கு மத்தியிலும் புன்னகைக்கத் தொடங்குவேன். யார் ஒருவர் கீதையை தீவிரமாக சிந்திக்கிறார்களோ, அவர்கள் தினந்தோறும் புத்தம் புது மகிழ்ச்சியையும், புது அர்த்தங்களையும் பெறுவர்.”

– அண்ணல் காந்தியடிகள்

பகவத்கீதையை படித்த பின், கடவுள் எவ்வாறு எல்லாவற்றையும் படைத்துள்ளார் என்பதை சிந்திக்கும் போது மற்ற விஷயங்கள் எல்லாம் அவசியம் இல்லாதது போல் தெரிகிறது.

– ஆல்பர்ட் ஐன்ஸ்டின்,  நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி

காலையில் என்னுடைய அறிவை ஆச்சர்யப்படத் தகுந்த பகவத்கீதை தத்துவத்தில் குளிக்கச் செய்கிறேன். கீதையின் தத்துவத்துடன் ஒப்பிடும் போது, நவீன உலகமும் அதன் இலக்கியங்களும், மிகச் சிறியதாகவும், முக்கியத்துவம் இல்லாததாகவும் ஆகி விடுகிறது.

– ஹென்றி டேவிட் தோரோ, புலமைமிக்க  தத்துவமேதை, அமெரிக்கா.

பெருமை வாய்ந்த பகவத்கீதைக்கு நான் கடமைப் பட்டிருக்கிறேன். புத்தகங்களின் முதன்மையானது பகவத்கீதை. இதில் வீணானதோ, அற்பமானதோ எதுவும் இல்லை.  தான் தோன்றிய காலம் முதல் மாறுபட்ட சூழல் கொண்ட இன்றைய சூழ்நிலையிலும் எழக்கூடிய கேள்விகளுக்கு விடையளிப்பதாக விளங்குகிறது பகவத்கீதை.

– ரால்ப் வால்டோ எமர்சன், புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர், பேராசிரியர்

பகவத்கீதை உண்மையுருவில் பற்றி . . .

பகவத்கீதை உண்மையுருவில், ஆழமாய் உணரப்பட்டு  அழகாக விவரிக்கப்பட்டுள்ள ஓர் படைப்பு.  தைரியமான விளக்க உரைகளையா அல்லது வளமான எண்ணங்களையா – எதைப் புகழ்வது என்று தெரியவில்லை எனக்கு. இதுவரை வேறு எந்த கீதை உரைகளிலும் இது போன்றதொரு இவ்வளவு முக்கியமான கருத்தையும், நடையையும் பார்த்ததில்லை. நாகரீக மனிதனின் அறிவுப்பூர்மான மற்றும் அறநெறி வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான இடத்தை நெடுங்காலத்திற்கு தக்க வைக்கும்.

– டாக்டர். எஸ். சுக்லா, போராசிரியர்,  ஜியர்ஜ் டவுண் பல்கலைகழகம், வாஷிங்டன், அமெரிக்கா.