மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான யோகா கேம்ப்

இன்றைய மாணவர்கள் நாளைய தூண்கள் ஆவர். குறிப்பாக மாணவர் பருவத்தில் நல்லொழுக்கத்தையும், நற்பண்புகளையும் கற்றோர் எதிர்கால்த்தில் நல்ல வழிகளிலேயே செல்வர். குறிப்பாக மாணவப் பருவத்தில் பக்தி நெறிமிக்க வாழ்க்கையை கற்றுக்கொண்டால் நற்பண்புகளும், ஒழுக்கமும் தானாகவே வந்துவிடும்.

ஸ்ரீலபிரபுபாதா மேலை நாடுகளில் 1970களில் பிரசாரம் செய்தபோது மாணவர்களுக்கு மஹாமந்திர ஜப தியானத்தை மேற்கொள்ளுமாறு ஊக்குவித்தார். இந்த ஜப தியானத்தை பற்றி பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் உரையாற்றினார். பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த ஜப தியானத்தல் ஆர்வம் கொண்டு பயிற்சி செய்தனர். இன்றும் பல கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் இந்த பயிற்சி தொடர்கிறது.
இந்த மாணவர் நல வகுப்புகளின் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு சிறப்பு யோகா கேம்ப் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இந்த கேம்ப்கள் இஸ்கான் மதுரை, திருநெல்வேலி மற்றும் பெரியகுளம் கிளைகளிலும் நடைபெறுகின்றன. மேலும் சில கல்லூரிகளிலும் இந்த யோகா கேம்ப் நிகழ்ச்சிகள் இஸ்கான் மூலம் நடத்தப்படுகின்றன.

இந்த கேம்ப்கள் முதல் நிலை மற்றும் இரண்டாவது நிலை கேம்ப்களாக நடைபெறுகின்றன. இதில் குறிப்பாக மாணவர்களுக்கு பல்வேறு கோணங்களில் மந்திர தியான பயிற்சி வழங்கப்படுகின்றன. வாழ்வின் சவால்களை எதிர்நோக்கும் வகையில் மாணவர்களுக்கு மனவலிமை மற்றும் ஊக்கம் தரும் பல்வேறு தொடர் சொற்பொழிவுகள் இடம்பெறுகின்றன. மேலும் நமது வேத கலாசாரத்தில் கூறப்பட்ட பல்வேறு விஷயங்களை விஞ்ஞான புர்வமாக மாணவர்களுக்கு எடுத்துரைக்கப் படுகின்றன.

இந்த யோகா கேம்ப்களில் பங்கேற்பதால் மாணவர்கள் பெறும் பலன்கள் பின்வருமாறு:

  • மன ஒருமைப்பாடு பெற்று கல்வியில் நல்ல கவனம் செலுத்த முடியும்.
  • நல்ல ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்ள முடியும்.
  • மனக்கட்டுபாடு எளிதில் கிடைக்கபெறும்.
  • மனத் தளர்ச்சி, மனச் சோர்வு, நீங்கப் பெறுகிறது.
  • தீய பழக்கவழக்கங்கள் விலகிவிடும்.
  • தனது வாழ்வின் நோக்கத்தை அறிந்த பொறுப்புள்ள மாணவராக திகழ முடியும்.
  • ஒரு பக்தி நெறிமிக்க கட்டுப்பாடான அமைதியான வாழ்வு வாழ முடியும்.

இதுவரை 6000 த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த யோகா கேம்ப்பளில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.