பெரியகுளம் இஸ்கான் ஆஸ்ரம சேவைகள்

தென்தமிழகத்தின் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அமைந்துள்ள இஸ்கான் யோகா ஆஸ்ரமத்தின் மூலம் மக்களுக்கு பல வகைகளில் சேவை செய்து வருகிறது. குறிப்பாக எளிய வாழ்வு, உயர்ந்த சிந்தனை என்பதை வலியுறுத்தும் வகையில் இங்கு சேவைகள் நடக்கின்றன.

இயற்கை விவசாயம், மரங்கள் பராமரிப்பு, சுற்று வட்டார பகுதி மக்களுக்கு ஆன்மீக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என்ற வகையில் பல்வேறு சேவைகளை இஸ்கான் பெரியகுளம் ஆஸ்ரமம் செய்து வருகிறது.

மாணவர்களுக்கான யோகா கேம்ப்கள், குடும்பத்தினர்களுக்கான கேம்ப்கள் மற்றும் ஆன்மீக யாத்திரைகள் போன்ற ஆன்மீக புத்துணர்வு கேம்ப்கள் இங்கு நடைபெறுகின்றன.