ஹரி நாம சங்கீர்த்தனம்

நாம சங்கீர்த்தனம் யஸ்ய சர்வ பாப ப்ரணாஷனம்

ப்ரணாமோ துக்க சமனஸ் தம் நமாமி ஹரிம் பரம்

பரம புருஷராகிய பகவான் ஸ்ரீ ஹரியின் நாம சங்கீர்த்தனம் எல்லா பாவங்களையும் நீக்கும்.  அவரை நமஸ்கரிப்பது எல்லா துன்பங்களையும் துடைக்கும். அப்பேர்ப்பட்ட பகவான் ஸ்ரீ ஹரிக்கு எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்”  (ஸ்ரீமத்பாகவதம் 12.13.23)

இதுவே ஸ்ரீமத் பாகவதத்தின் இறுதி ஸ்லோகம் ஆகும். பகவான் ஹரியின் நாம சங்கீர்த்தனம் ஒருவரின் எல்லா பாவங்களையும் நீக்கி விடுகின்றது.மேலும் பகவானிடம் தூய அன்பை வளர்க்க இதுவே வழியாகவும் கூறப்படுகிறது. அதனாலேயே ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபு எல்லோரையும் ஹரிநாம சங்கீர்த்தனம் செய்ய ஊக்குவித்தார்.

ஸ்ரீல பிரபுபாதா இக்கூற்றை நிரூபித்தவர் ஆவர்.1965 இல் அமெரிக்கா சென்ற ஸ்ரீல பிரபுபாதா தங்க ஒரு  சரியான இடம் கூட இல்லாமல்  இங்கும் அங்கும் தங்கி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் முக்கியமாக பல இடங்களில் நாம சங்கீர்த்தனமே செய்தார். குறிப்பாக நியூயார்க் டாம்ப்கின்ஸ் ஸ்கொயர் பார்க்கில் செய்வது வழக்கம்.

ஸ்ரீல பிரபுபாதாவின் நாம சங்கீர்த்தனத்தினால் ஏராளமான இளைஞர்கள் கோவிலுக்கு வரத் துவங்கினர். குறிப்பாக பல தீய பழக்கங்களில் மூழ்கியிருந்தவர்கள் கூட இந்த நாம சங்கீர்த்தனத்தால் தூய்மை அடைந்து பெரும் பக்தர்களாக மாறி இன்றளவும் சேவை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆகவே ஹரிநாம சங்கீர்த்தனம் இஸ்கானின் மிக மிக முக்கிய சேவையாக கருதப்படுகிறது.மதுரை, திருநெல்வேலி,பெரியகுளம் மற்றும் அதன் சுற்றியுள்ள ஊர்களில் குறிப்பிட்ட தினங்களில் ஹரிநாம சங்கீர்த்தனம் நடைபெற்று வருகிறது.இந்த சங்கீர்த்தனங்களில் பெரும்பாலும் ஸ்ரீ ஸ்ரீ கௌர நித்தாய் விக்ரஹங்களும்  இடம் பெறுவது வழக்கம். குறிப்பாக இதில் பக்தர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று மக்களுக்கு ஹரி நாமத்தை எடுத்து கொடுக்கின்றனர்.