மாணவர் நல நிகழ்ச்சிகள்






இஸ்கான் ஆற்றும் சேவைகளில் ‘மாணவர் நல நிகழ்ச்சிகள்’ குறிப்பிடத்தக்கதாகும். 1966ல் முதன் முதலாக இஸ்கான் இயக்கத்தை ஸ்ரீலபிரபுபாதா அவர்கள் துவக்கிய போது பல இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பொதுவாக ஸ்ரீல பிரபுபாதா இளைஞர்களிடம் அதிக கவனம் செலுத்துவார். அமெரிக்கா செல்வதற்கு முன்னர் பிரபுபாதா இந்தியாவில் பிரச்சாரம் செய்த போதிலும் பல இளைஞர்கள் கவரப்பட்டனர்.

குறிப்பாக ஸ்ரீல பிரபுபாதா ஜான்சியில் 1950களில் பிரசாரம் செய்தபோது பல இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

1966க்குப் பிறகு பிரபுபாதா மேலைநாடுகளில் எந்த நகரத்திற்கு சென்றாலும் அங்குள்ள பல்கலைக் கழகங்களில் உரையாற்றுவது வழக்கமாயிற்று. இப்படியாக பல மதிப்புமிக்க பல்கலைக் கழகங்களில் கிருஷ்ண உணர்வை பிரசாரம் செய்தார். அன்று ஸ்ரீல பிரபுபாதா அமைத்த அடித்தளம் இனறளவும் தொடர்கிறது. ஸ்ரீல பிரபுபாதா உருவாக்கிய இளைஞர்கள் தான் இன்றளவும் இந்த இயக்கத்தை வழிநடத்துகின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதா அமைத்த வழியில் இன்று இஸ்கான் மதுரை மற்றும் திருநெல்வேலியை சுற்றியுள்ள எட்டு மாவட்டங்களில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் 1995 முதல் பல மாணவர் நல நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

கல்லூரிகளில் குறிப்பாக மாணவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வாக அவர்களுக்கு Yoga for Modern Mind என்ற தலைப்பின் கீழ் பல்வேறு வகுப்புகள் நடைபெறுகின்றன.

மேலும் Personality development and Character Building என்ற தலைப்பில் தொடர் வகுப்புகளும், Seminar-களும் பல கல்லூரிகளில் நடைபெறுகின்றன. இவை மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன.

இந்த மாணவர் நல நிகழ்ச்சிகள் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். அதற்கு முக்கிய காரணம். என்னவென்றால் இவை விஞ்ஞானப்பூர்வமாக விளக்கப்படுகின்றன. பகவத்கீதையில் விளக்கப்பட்டுள்ள யோக முறையை விஞ்ஞானப்பூர்வமாக மாணவர்கள் புரிந்து கொள்வதற்கு இந்த வகுப்புகள் உதவுகின்றன.

முக்கியமாக இந்த வகுப்புகளில் மாணவர்கள் சந்திக்கும் அடிப்படை பிரச்சனைகளான கல்வியில் கவனமின்மை, மனத்தளர்ச்சி, தீய பழக்கங்கள், எதிர்கால பயம், மன அழுத்தம், ஒழுக்கமின்மை போன்ற நிலைகளுக்கு சரியான தீர்வு மற்றும் பயிற்சி வழங்கப்படுகின்றன.

அது மட்டுமல்லாமல் மாணவர்கள் நல்ல சிந்தனைகளையும், நல்ல பழக்கவழக்கங்களையும் வளர்த்துக் கொள்வதோடு, வாழ்வின் நோக்கத்தை புரிந்து கொண்டு, ஒரு பொறுப்பு மிக்க பக்தி நெறி வாழ்க்கை வாழ்வதற்கு இந்த வகுப்புகள் ஊக்குவிக்கின்றன.