இல்லங்களில் கிருஷ்ண பக்தி நிகழ்ச்சிகள்
ஒருமுறை சைதன்ய மஹாபிரபு தென்னிந்திய பிரயாணம் சென்றபோது கூர்மகே்ஷத்திரம் வந்தடைந்தார். அங்கு கூர்மர் என்ற கிருஹஸ்த பக்தரின் இல்லத்தில் தங்கினார். பிறகு சைதன்ய மஹாபிரபு விடைபெறும் போது, அவரும் எல்லாவற்றையும் துறந்து மஹாபிரபுவுடன் வருவதாக கூறினார். ஆனால் மஹாபிரபு, வேண்டாம். தாங்கள் தங்கள் கிரஹஸ்த வாழ்வில் இருந்துகொண்டு ஹரே கிருஷ்ண ஜபத்தை செய்யவும். மேலும் யாரை சந்தித்தாலும் அவர்களை கிருஷ்ணரின் உபதேசங்களை பின்பற்றச் சொல்லி ஹரே கிருஷ்ண ஜபம் செய்யச் சொல்லவும். இப்படிச் செய்தால் உங்கள் இல்லற வாழ்க்கை ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடையாக இருக்காது” என்று கூறினார்.
அந்த வகையில் ஒவ்வொறு குடும்பஸ்தரும் தங்கள் வாழ்வை பக்குவப்படுத்த குடும்ப அங்கத்தினர்களை மஹாமந்திரம் உச்சரிக்க ஊக்குவிக்க வேண்டும். மேலும் தங்கள் சுற்றத்தார் மற்றும் உறவினரையும் மஹாமந்திரத்தை உச்சரிக்கச் செய்யலாம்.
இதை ஊக்குவிக்கும் வகையில் இஸ்கான் பக்தி நிகழ்ச்சிகளை இல்லங்களில் நடத்தி வருகின்றது. மதுரை, திருநெல்வேலி, பெரியகுளம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பல இல்லங்களில் கிருஷ்ண பக்தி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இந்த நிகழ்ச்சிகளில் ஹரிநாம சங்கீர்த்தனம், நாம ஜபம், பகவத்கீதை அல்லது பாகவதம் உரை, ஆரத்தி மற்றும் பிரசாதம் முறையே நடைபெறுகிறது. சுமார் 1 மணிநேர முதல் 1.5 மணிநேரம் இந்த நிகழ்ச்சி வாரம் ஒருமுரை இல்லங்களில் நடைபெறுகின்றது.