இஸ்கான் மதுரை கோயில் வரலாறு

இஸ்கான் மதுரை

ஸ்ரீஸ்ரீராதா மதுராபதி திருக்கோயில்

உலகெங்கும் 650க்கும் மேற்பட்ட கோயில் மற்றும் யோகா மையங்களுடன் செயல்படும் இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில், நம் மதுரையில் 1995ல் துவக்கப்பட்டது.

சிம்மக்கல் அருகே ஒரு வாடகைக் கட்டிடத்தில் தனது சேவைகளை செய்து வந்த இஸ்கான், விரைவில் மாணவர்கள் மற்றும் மக்களின் ஆதரவைப் பெற்றது.  இதன் பலனாக பக்தர் ஒருவர் ‘ஞாயிறு சந்தை’ அருகே உள்ள மணிநகரம் பிரதான சாலையில் இஸ்கான் கோயில் கட்ட இடம் அளித்தார்.

முன்னாள் விண்வெளித் துறை விஞ்ஞானியும், இஸ்கான் மதுரை கிளையின் தலைவருமான  திரு.சங்கதாரி பிரபு அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் 1998ல் துவங்கிய இதன் கட்டுமானப் பணிக்காக தொழில் துறையில் பணிபுரிபவர்களும், வியாபார ஸ்தாபகர்களும் இஸ்கான் ஆயுள் உறுப்பினர்களாக சேர்ந்து ஆதரவு அளித்தனர்.

2001  மே மாதம் ருக்மணி துவாதசி அன்று புதிய கோயிலின் மஹா கும்பாபிஷேகம்,  இஸ்கான் மூத்த சந்நியாசியும், ஆன்மீக குருவுமான தவத்திரு.ஜெயபதாக சுவாமி அவர்களின் தலைமையில் நடந்தது. 

பிரம்மாண்டமான வளைவுடனும், கலசங்களுடனும் காட்சியளிக்கும் இக்கோயில் ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண; கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே; ஹரே ராம ஹரே ராம; ராம ராம ஹரே ஹரே” என்ற திவ்ய மந்திரங்களை ஒலித்த வண்ணம் உள்ளது. 

மக்கள் மன அமைதிக்காக அமைக்கப்பட்டுள்ள கோயில் மற்றும் யோகா வளாகம் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் மிகவும் நேர்த்தியான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.  நுழைவு வாயிலில் கம்பீரமாக நிற்கும் கருடாழ்வாரின் சன்னதி எப்பேற்பட்டவரையும் பணிய வைக்கிறது.

மூலஸ்தானத்தில் ஸ்ரீஸ்ரீராதா மதுராபதி எனும் திருப்பெயரில் ராதா கிருஷ்ணரின் திருவிக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. எட்டு விதமான உலோகங்களால் செய்யப்பட்டுள்ள இந்த விக்ரஹங்கள் கிருஷ்ணர் பிறந்து வளர்ந்த இடமான மதுரா-விருந்தாவனத்தில் செய்து கொண்டு வரப்பட்டதாகும். புன்சிரிப்புடனும், உருக்கிய பொன்னிறத்துடனும் காணப்படும் இது போன்ற ராதா கிருஷ்ணரின் அஷ்டதாது விக்ரஹங்கள் தமிழகத்திலேயே இங்கு தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நடத்தி வருகிறது மதுரை இஸ்கான். குறிப்பாக மாணவர்களை நல்வழிப்படுத்துவதில் மதுரை இஸ்கான் ஆற்றிய சேவைகளை பலப்படுத்தும் வண்ணம், மதுரை காமராஜ் பல்கலைகழகம்,  தன்னை அறியும் விஞ்ஞானம்”, யோகத்தில் பூரணத்துவம்” என்ற  இஸ்கான் புத்தகங்கள் இரண்டினை  பொறியியற் கல்லூரி பயிலும் முதல்நிலை மாணவர்களுக்கு, பெர்சனாலிட்டி டெவலப்மென்ட் பிரிவில் பாடபுத்தகமாக (1997-1999) அங்கீகரித்தது. முன்னதாக, இந்திய அஞ்சல் துறை, இப்புத்தகங்களை எழுதியவரும், இஸ்கான் ஸ்தாபக ஆச்சாரியருமான சுவாமி ஸ்ரீலபிரபுபாதாவின் நினைவாக அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஸ்ரீலபிரபுபாதாவின் புத்தகங்கள் மற்றும் அறிவுரைகளின் கீழ் இன்று  ஏராளமான மக்கள் தங்கள் வாழ்வில் பக்குவம் அடைந்து வருகின்றனர்.  மேலும் அனைவரும் பயன்பெறுவதற்காக இஸ்கான் மதுரை கிளை ஸ்ரீலபிரபுபாதாவின் புத்தகங்களை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குறைந்த நன்கொடையில் விநியோகித்து வருகிறது.  குறிப்பாக  ‘பகவத்கீதை – உண்மையுருவில்’ என்ற புத்தகம், மதுரை மக்களின் பெரும்பாலோனாரிடம் நிச்சயம் இருக்கும் எனலாம். ஏனெனில் அந்த அளவிற்கு இஸ்கான் பக்தர்கள் குழு பகவத்கீதையை மக்கள் மத்தியில் எடுத்து கொடுத்து வருகிறது. படித்த இளைஞர்களும், மருத்துவர்களும், ஆசிரியர்களும் கூட இஸ்கான் புத்தக விநியோக சேவையில் ஈடுபடுகின்றனர்.

கல்லூரிகளில்  இஸ்கான் நடத்தும்  யோகா வகுப்புகள், மாணவர்கள் நன்னடத்தையுடன் கல்வியில் கவனம் செலுத்த  உதவுகிறது. குறிப்பாக வேண்டாத பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட இங்கு கற்றுக் கொடுக்கப்படும் ஜப யோகா மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இஸ்கான் வளாகத்தில் நடத்தப்படும் ஜப யோகா கேம்ப்கள் மூலம் பல  தரப்பட்ட மாணவர்களும் பயன்பெறுகின்றனர். தவிர குழந்தைகள் மற்றும் குடும்ப அங்கத்தினர்களுக்கான கேம்ப்களும் நடைபெறுகின்றன.

மேலும், ஜபதியானம், வழிபாட்டு நிகழ்ச்சிகள், பகவத்கீதை சிறப்புரை, மாணவர்கள் நல்லொழுக்க வகுப்புகள், பிரசாத அன்னதானம், பகவத்கீதை விநியோகம், மக்கள் நல மஹால் நிகழ்ச்சிகள் என்று பலவாறு இஸ்கான் தனது பணிகளைச் செய்து வருகிறது.