இஸ்கான் பெரியகுளம் கோயில் வரலாறு

இஸ்கான் பெரியகுளம்

ஸ்ரீஸ்ரீராதா மதுராபதி ஸ்ரீஸ்ரீகிருஷ்ண பலராம் யோகா ஆஸ்ரம்

உலகெங்கும் 650க்கும் மேற்பட்ட கோயில் மற்றும் யோகா மையங்களுடன் செயல்படும் இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில், பெரியகுளத்தில் 2007ல் துவக்கப்பட்டது.

மதுரை மற்றும் திருநெல்வேலி இஸ்கான் கோயில்கள் திருப்பணி முடிந்த பிறகு, 2007ல் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் மாமரம் மற்றும் தென்னை மரங்களுடன் கூடிய விவசாய நிலம் வாங்கப்பட்டது.

எளிய வாழ்வு, உயர்ந்த சிந்தனை என்று ஸ்ரீலபிரபுபாதா அடிக்கடி கூறுவதை நடைமுறைப்படுத்தும் வகையில் இந்த பெரியகுளம் ஆஸ்ரமம் துவக்கப்பட்டது.

குறிப்பாக மாணவர்கள் மற்றும் பக்தர்களுக்கு சிறப்பு கேம்ப்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் இங்கு நடத்தப்படுகின்றன. மேலும் இயற்கையான முறையில் விவசாய பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை தென்தமிழகத்தில் உள்ள இஸ்கான் கோயில்கள் பயன்பாட்டுக்கும், விநியோகத்திற்கும் அளிக்கப்படுகின்றன.

சிறப்பம்சமாக இங்கு விளையும் மாம்பழங்கள் தென்தமிழக மக்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன.