இஸ்கான் தத்துவம்
இஸ்கானின் ஆன்மீக பயிற்சி மற்றும் தத்துவம்
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ணகிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராமராம ராம ஹரே ஹரே”
என்ற 16 வார்த்தைகளடங்கிய மஹாமந்திரத்தை தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் உச்சரிப்பது ‘மஹாமந்திர தியானம்’ ஆகும். இந்த ஜபதியானமே இஸ்கானின் ஆன்மீக பயிற்சியில் தலையாயது ஆகும்.
சுமார் 500 வருடங்களுக்கு முன் அவதரித்த, பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் கலியுக அவதாரமான ஸ்ரீகிருஷ்ண சைதன்ய மஹாபிரபு ஏற்படுத்திய ‘ஹரிநாம சங்கீர்த்தனமே’ இஸ்கான் பின்பற்றும் தத்துவங்களின் ஆணிவேராகும்.
மேலும் வேத ஞானத்தின் மணிமகுடமாக திகழும் பகவத்கீதை மற்றும் ஸர்வ வேதங்களின் சாரமாக விளங்கும் ஸ்ரீமத் பாகவதம் இவை இரண்டும் இஸ்கான் தத்துவங்களின் அடிப்படையாகும். இஸ்கானின் தத்துவங்கள், பிரம்ம, மத்வ, கௌடிய சம்பிராதயத்தின் கீழ் வருவதாகும். குறிப்பாக இஸ்கான் தத்துவங்களின் ஒட்டுமொத்த நோக்கம், பகவான் கிருஷ்ணரிடம் அன்பு செலுத்துவதே ஆகும்.
இஸ்கான் குறிக்கோள்
ஸ்ரீல பிரபுபாதா, 1966 ஜுலையில் இஸ்கானை ஆரம்பித்தார். அச்சமயம் ஸ்ரீலபிரபுபாதா, இஸ்கான் நிறுவன ஆவணத்தில்
இஸ்கானின் ஏழு குறிக்கோள்களை குறிப்பிட்டிருந்தார்.
1. உலகில் உண்மையான அமைதி மற்றும் ஒற்றுமை ஏற்படவும், வாழ்க்கையின் உயர்ந்த மதிப்பை உணராமல் செயல்படுவதை தவிர்க்கவும், ஆன்மீக ஞானத்தை முறைப்படி பரப்பி, ஆன்மீக வாழ்க்கையின் நுணுக்கங்களை பற்றி அனைத்து மக்களுக்கும் கற்றுக் கொடுப்பது.
2. இந்தியாவின் மிகப்பெரும் சாஸ்திரங்களான பகவத் கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தில் குறிப்பிட்டவாறு, கிருஷ்ண உணர்வை பரப்புவது.
3. இஸ்கான் இயக்கத்தின் உறுப்பினர்களை ஒருங்கிணைத்து, பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு அருகே அழைத்து வருவது. இதன் மூலமாக உறுப்பினர்கள் மற்றும் மனித சமுதாயத்தினரிடடையே ஒவ்வொருவரும் ஆத்மா மற்றும் பகவான் கிருஷ்ணரின் அம்சம் என்ற எண்ணத்தை மேலோங்கச் செய்வது.
4. பகவான் ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவின் உபதேசங்களின் படி, சங்கீர்த்தன இயக்கத்தை, அதாவது பகவானின் புனித நாமத்தை ஒன்று கூடி உச்சரிப்பது, எடுத்துரைப்பது மற்றும் உற்சாகப்படுத்துவது.
5. உறுப்பினர்கள் மற்றும் மனித சமூகத்திற்காக பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மற்றும் பகவானின் லீலைகள் அடங்கிய புனித ஸ்தலத்தை நிர்மாணிப்பது
6. எளிமையான மற்றும் இயற்கையான வாழ்க்கை முறையை எப்படி வாழ்வது என எடுத்துரைக்க உறுப்பினர்களை நெருக்கமாக ஒருங்கிணைப்பது
7. மேற்குறிப்பிட்ட நோக்கங்களை எல்லாம் நிறைவேற்றுவதற்காக, பத்திரிக்கைகள், இதழ்கள், புத்தகங்கள் மற்றும் எழுத்துக்கள் ஆகியவற்றை பிரசுரித்து விநியோகிப்பது.
இஸ்கான் பற்றிய வீடியோ: