ஞாயிறு சிறப்பு நிகழ்ச்சிகள்
(ஞாயிறு தோறும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை)
“ஞாயிறு சிறப்பு நிகழ்ச்சி” என்பது இஸ்கான் கோயில்களில் நடத்தப்படும் வாராந்திர ஆன்மீக விழாவாகும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் அனைவரும் பங்கேற்று பயன்பெறும் நிகழ்ச்சி இது. அதிலும் குறிப்பாக மாணவர்களுக்கு நற்பண்புகளை கற்றுத் தரும் சிறப்பு நிகழ்ச்சி இது.
1966ல் இஸ்கான் ஸ்தாபக ஆச்சாரியர் ஸ்ரீலபிரபுபாதா அவர்களால் துவக்கப்பட்ட இந்த ஞாயிறு சிறப்பு நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது.
மஹாமந்திர தியானம், ஹரிநாம சங்கீர்த்தனம், விசேஷ பூஜைகள், பகவத்கீதை சிறப்புரை, ஆன்மீக கேள்வி பதில்கள், கிருஷ்ண பிரசாதம் இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களாகும்.
பொதுவாக மக்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கும், மனக் குழப்பங்களுக்கும் நல்ல தீர்வை இங்கு காணலாம்.
ஆன்மீகத்தில் ஆர்வமுடையவர்கள், உண்மையான ஆன்மீகத்தின் அவசியத்தை அறியலாம். நான் யார்? கடவுள் யார்? நமக்கும் கடவுளுக்கும் என்ன உறவு? என்பதை வேதசாஸ்திரங்களின் துணையுடனும், விஞ்ஞானப் பூர்வமாகவும் விளக்கப்படுகிறது.
மேலும் கிருஷ்ண பக்தர்களுக்கு இந்த ஞாயிறு சிறப்பு நிகழ்ச்சி முக்கியமான ஆன்மீக சத்சங்கமாகும். இந்த ‘ஞாயிறு சிறப்பு நிகழ்ச்சி’ யில் பங்கேற்பதன் மூலம் பக்தர்கள் ஆன்மீக புத்துணர்வை தொடர்ந்து பெறுகின்றனர்.
இஸ்கான் மதுரை மற்றும் திருநெல்வேலி கோயில்களில் ஞாயிறு தோறும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை இந்த ஞாயிறு சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.