கிராம நலன் நிகழ்ச்சிகள்
ப்ருதிவிதே ஆச்சே யத நகராதி
கிராம ஸர்வத்ர ப்ரச்சார ஹைபே மோர நாம
ஒவ்வொரு கிராம, நகரங்களில் எனது நாமம் உச்சாடனம் கேட்கப்படும்”
– ஸ்ரீசைதன்ய மஹாபிரபு (ஸ்ரீசைதன்ய பாகவதம் அந்த்ய லீலை 4.126)
பகவான் ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவின் இந்த கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் உலகெங்கும் இஸ்கான் கிராம நலன் நிகழ்ச்சிகளை நடத்துகிறது.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
என்ற மஹாமந்திரத்தை அனைவரையும் உச்சரிக்கச் செய்து எல்லாம் மக்கள் நலமுடனும், வளமுடனும் வாழ ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது இஸ்கான்.
இஸ்கான் மதுரை மற்றும் திருநெல்வேலியில் கீழ் தென்தமிழகத்தின் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் பகவத்கீதை வகுப்புகள், மந்திர தியான பயிற்சி உள்ளிட்ட கிராம நலன் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் கிராம மக்கள் நல்ல மனநிம்மதியுடனும், தெய்வீக உணர்வும் மேலிட தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள இஸ்கான் வழிகாட்டுகிறது.