இஸ்கான் என்றால் என்ன?
‘இஸ்கான்’ என்றால்International Society for Krishna Consciousness என்பதன் சுருக்கம் (ISKCON) ஆகும். தமிழில் ‘அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்’ என்பதாகும். தவிர, இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில் என்றும் அன்புடன் அழைக்கப்படுகிறது.
கல்கத்தாவில் தோன்றிய ஆன்மீக ஆச்சாரியரியரான தெய்வத்திரு. அ.ச.பக்தி வேதாந்த ஸ்வாமி ‘ஸ்ரீலபிரபுபாதா’ அவர்கள் முதன் முதலில் 1966ல் நியூயார்க் நகரத்தில், ‘இஸ்கான்’ நிறுவப்பட்டது.
பிறகு வெகு குறுகிய காலத்திலேயே ஸ்ரீல பிரபுபாதாவின் தீவிர ஆன்மீகப் பிரச்சாரத்தினால் உலகின் பல பாகங்களிலும் இஸ்கான் நிறுவப்பட்டது.
தற்சமயம், உலகம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட கோயில்கள் மற்றும் யோகா மையங்களுடனும், லட்சக்கணக்கான கிருஷ்ணபக்தர்களுடனும் 50 ஆண்டு காலமாக மக்களுக்கு நற்தொண்டாற்றி வருகிறது ‘இஸ்கான்’.
குறிப்பாக இஸ்கான், அனைத்து மக்களின் நலனுக்காக சேவையாற்றும் உயர்ந்ததொரு ஆன்மீக அமைப்பாகும்.
மக்கள் மனதில் தெய்வ சிந்தனையை நிலைநிறுத்தி, நற்பண்புகளை வளரச் செய்து அமைதிக்கும் ஒற்றுமைக்கும் நல்வழிகாட்டுகிறது ‘இஸ்கான்’.
மந்திர தியான பயிற்சிகள், பிரசாத அன்னதானம், பகவத்கீதை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மாணவர் நல வகுப்புகள், மக்கள் நல நிகழ்ச்சிகள், சிறைச்சாலைகளில் நன்னடத்தை வகுப்புகள், மதநல்லிணக்க வகுப்புகள், கிராம நலன் நிகழ்ச்சிகள், அவசரகால நிவாரணப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஜாதி, மத, இன, பேதமின்றி செய்து வருகிறது ‘இஸ்கான்’.
தவிர, இஸ்கான் கோயில்களில் மாணவர்கள் மற்றும் குடும்பத்தினர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளையும் நடத்துகிறது.
இந்த நிகழ்ச்சிகள் மூலம் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.